1

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான ஆனந்த் சங்கர் என்பவரை அரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தினார் கலைப்புலி தாணு.

விக்ரம் பிரபு நடித்த படங்களிலேயே ஓரளவு பெரிய பட்ஜெட் படம் அரிமா நம்பிதான்.

வழக்கம்போல் தாணு பிரம்மாதமாக விளம்பரங்களை செய்து அரிமா நம்பி படத்தை பிரம்மாண்டமான படம்போல் பில்ட்அப் கொடுத்தார்.

அதன் காரணமாக அரிமா நம்பி படம் ஓரளவு வசூல் செய்தது.

டெக்னிக்கலாக அந்தப்படம் பேசப்பட்டதால் ஆனந்த் சங்கருக்கு அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார் தாணு.

அதோடு விக்ரமுக்கு கதை சொல்லவும் ஏற்பாடு செய்தார்.

ஆனந்த் சங்கர் சொன்ன கதை விக்ரமுக்குப் பிடித்துப்போக ப்ரீ புரடக்ஷன்ஸ் வேலைகள் தொடங்கின.

இதை அறிந்த ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ கருணாமூர்த்தி கடுப்பாகிவிட்டார்.

பீமா படத்தில் நடித்தபோது ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கினாராம் விக்ரம்.

இத்தனை வருடமாக கால்ஷீட் கொடுக்காமல் விக்ரம் இழுத்தடிக்க, தயாரிப்பாளர் சங்கத்தில் ‘ஐங்கரன்’ கருணாமூர்த்தி புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் தாணு தயாரிக்க திட்டமிட்ட ‘மர்ம மனிதன்’ படம் ஐங்கரனுக்கு கைமாறியது.

இதற்கிடையில், விக்ரம் நடித்து வந்த ‘10 எண்றதுக்குள்ள’ படம் சமீபத்தில் வெளியாகி படு தோல்வியடைந்தது.

எனவே விக்ரமை வைத்து ‘மர்ம மனிதன்’ படத்தை தயாரிக்கும் திட்டத்திலிருந்து ‘ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் விலகிவிட்டது.

இதனை தொடர்ந்து இப்போது ’மர்ம மனிதன்’ படத்தை , விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீம் தயாரிக்க உள்ளார்.

மர்ம மனிதன் படத்திற்கு பூஜை போடுவதற்கு முன்பே மூன்று கை மாறிவிட்டது.

இன்னும் எத்தனை கை மாறப்போகிறதோ?

Comments

comments