2

‘துப்பாக்கி’ படக் கூட்டணியான ஏ.ஆர்.முருகதாஸ் – சந்தோஷ்சிவன் இணைந்து மகேஷ்பாபு படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.

சோனாக்‌ஷி சின்ஹா, அனுராக் கஷ்யாப், லட்சுமி ராய் உள்ளிட்ட பலர் நடித்துவரும் ‘அகிரா’ இந்தி படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படம் தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மெளனகுரு’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

‘அகிரா’ படத்தைத் தொடர்ந்து தமிழ் – தெலுங்கு என இருமொழிகளிலும் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்துக்காக கதையை இறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ‘துப்பாக்கி’ படத்தில் பணியாற்றிய சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் துவங்க இருக்கிறது.

மகேஷ்பாபு படத்தை முடித்துவிட்டு, இந்தி படம் ஒன்றை இயக்கிவிட்டு தான் நேரடி தமிழ் படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

Comments

comments