1

மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம், தமிழில் பாபநாசம் என்று எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றது. இப்போது அங்கு வெற்றி பெற்ற ‘ஷட்டர், ஒருநாள்இரவில் என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது. இதற்கடுத்து, மெமரீஸ். பெங்களூர் டேஸ்’ உள்ளிட்ட பல படங்கள் தமிழில் தயாராகின்றன.

திடீரென அதிக அளவு மலையாளப் படங்கள் தமிழில் எடுக்கப்படுவது எதனால் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அந்த ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். இதுபற்றி அவர், ‘‘தமிழ்ப் படங்களில் பிரம்மாண்டம் இருக்கும். அதிக செலவையும் வைக்கும். கதை இரண்டாம் பட்சமாகத்தான் பார்க்கப்படும்.

மலையாளத்தில் அப்படி இல்லை. அங்கு பெரிய தொகையை முதலீடு செய்வது இல்லை. கதையைத்தான் முக்கியமாக பார்க்கிறார்கள். செலவு இல்லாமல் கதையில் மட்டுமே கவனம் செலுத்தி படம் எடுக்கிறார்கள். அவை நன்றாக ஓடுகின்றன.

நல்ல கதைகளுக்கு எல்லா மொழிகளிலுமே வரவேற்பு இருக்கிறது. எனவேதான் ‘பாபநாசம்’ படம் நன்றாக ஓடியது. இதுபோல் தமிழில் வரும் படங்களின் பிரமாண்டத்தை மலையாள பட உலகினர் வியந்து பேசுகிறார்கள்.

‘ஷட்டர்’ படம் மலையாளத்தில் வசூல் சாதனை நிகழ்த்திய நல்ல கதையம்சம் உள்ள திகில் படம். எனவே தமிழில் ‘ஒரு நாள் இரவில்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளோம். ஒரு பெண்ணுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதே இந்தப் படத்தின் கதை என்கிறார். தமிழில் இந்தப்படத்தை இவர்தான் வெளியிடுகிறார் .

Comments

comments