1

டெல்லியில் அமீர்கான் “நாட்டில் மத சகிப்புத் தன்மை இல்லை இதன் காரணமாக ‘இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா?” என்று தன் மனைவி கேட்டார் என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமீர்கான் சொன்ன இந்தக் கருத்தை இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானும் ஆமோதித்துள்ளார், மதசகிப்பின்மையை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான ‘முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். எதுவும் வன்முறையாக இருக்கக் கூடாது. நாகரிக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு நாம் காண்பிக்க வேண்டும்” எனக் கூறினார்.

Comments

comments