1

கிருமி’ ஹீரோ கதிர்… அக்மார்க் சென்னை பேச்சுலர். வீட்டுக் கதவைத் திறந்தால் டி.வி ரிமோட், துவைக்காத துணிகள், பேஸ்ட், சோப்பு… எல்லாம்  இறைந்துகிடக்க… ”வாங்கங்ண்ணா” என்று சிரிக்கிறார் இந்தக் கொங்கு ப்ரோ.

‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’ படங்களில் தன் நடிப்பால் கவனம் ஈர்த்த கதிர், ‘சிகை’ பட ஃபர்ஸ்ட் லுக் மூலம் சோஷியல் மீடியாவில்  வைரலாகியிருக்கிறார்.

”நான் 1991-ல் பொறந்தவன். இண்டஸ்ட்ரில நான்தான் சின்ன வயசு ஹீரோனு நினைக்கிறேன். அப்பா, அம்மா கோயம்புத்தூர்ல இருக்காங்க. நான் இங்கே தனியா இருக்கேன்” – கதிர் பேச்சில் கொங்கு மணம் கமழ்கிறது.

‘சிவில் இன்ஜினீயரிங் கடைசி வருஷம் படிக்கும்போது கிடைச்ச வாய்ப்பு ‘மதயானைக் கூட்டம்’. மூணு மாசம் பிரேக் எடுத்துக்கிட்டு நடிச்சேன். ‘சிகை’ படத்துல வர்ற ஒரு கேரக்டருக்கு பெண் சாயல் தேவைப்பட்டது. இப்போ அதுக்கான கெட்டப் மாற்றம், பிராக்டீஸ்ல இருக்கேன்.’

p20a

”வீட்டுல யாராவது சினிமாவுல இருக்காங்களா?”

”இல்லைங்க… ஆனா, அப்பா ஒரு முன்னாள் விநியோகஸ்தர். இதுதான் சினிமாவுக்கும் என் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பு.”

”அப்புறம் எப்படி காலேஜ் படிக்கிறப்பவே நடிக்க வாய்ப்பு வந்தது?”

”நடிப்பு என் சின்ன வயசு ஆசை. ஆனா, காலேஜ் வரை அதுக்கு எந்த முயற்சியும் பண்ணலை. ஒருநாள் ஜி.வி பிரகாஷ் தயாரிக்கிற ஒரு படத்துக்கு என் வயசு ஹீரோ வேணும்னு சொன்னாங்க. அப்போதான் அவர் மேனேஜர்  மூலமா அவரைச் சந்திச்சேன்; செலெக்ட் ஆனேன். இப்படித்தான் ‘மதயானைக்கூட்டம்’ புராஜெக்ட்ல நான் உள்ளே வந்தேன்.”

” ‘சிகை’… என்ன ஸ்பெஷல்?”

”சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. இந்தக் கதையை இயக்குநர் ஜகதீசன் சொல்லும்போது, அடுத்த சீன் இதுவாதான் இருக்கும்னு யோசிப்பேன். ஆனா, அப்படி இருக்காது. சீனுக்கு சீன் என் எதிர்பார்ப்பை நொறுக்கிட்டே வந்தார். படத்துல மொத்தம் ஒன்பது கதாபாத்திரங்கள். அதுல ஒண்ணுதான் இந்தப் பெண் கதாபாத்திரம். 24 மணி நேரத்துக்குள்ள நடக்குது கதை.”

p20b

”படத்தோட ஃபர்ஸ்ட் லுக் செம ஹிட்டடிச்சிருக்கே..?”

”ஆமா… இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் வரும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. பெண் சாயல் உள்ள அந்த போட்டோவுலயே நிறைய சஸ்பென்ஸ் ஒளிஞ்சிருக்கு. கதைக்கு அந்த கேரக்டர் முதுகெலும்பா இருக்கும்.”

”சிவகார்த்திகேயன், தன் அடுத்த படத்துல இப்படி ஒரு கேரக்டர் பண்றதா சொல்றாங்களே..?”

”ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனதும்தான் சிவா அண்ணனும் பெண் கேரக்டர் பண்றாருனு தெரிய வந்துச்சு. நிச்சயம் அவங்க கதை வேற ரேஞ்ச்ல இருக்கும்!”

p20c

”இவ்ளோ சீக்கிரம் இப்படி ஒரு பெண் சாயல் கெட்டப் நடிக்க பயமா இல்லையா?”

”இல்லை… ஏன்னா கதை கேட்கிறப்பவே எனக்கு அந்தப் பெண் கதாபாத்திரம் மேல அதிக ஈர்ப்பு வந்துருச்சு. அதனாலதான் நானே இயக்குநர்கிட்ட  கேட்டு வாங்கிப் பண்றேன். இப்போ சோஷியல் மீடியாவுல கிடைக்கிற நல்ல ரெஸ்பான்ஸ் என் நம்பிக்கையை இன்னும் அதிகமாக்கியிருக்கு.”

”உங்கள் முதல் படத் தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்ப ஹிட் ஸ்டார் ஆகிட்டாரே?”

” ‘மதயானைக்கூட்டம்’ படம் தயாரிக்கிறப்போ அவருக்கு நடிக்கிற எண்ணம் இல்லை. இப்போ அவர் பர பர ஹீரோவானதுல எனக்கும் சந்தோஷம். ஏன்னா என்னை ரொம்ப உன்னிப்பா கவனிக்கிற ஆட்களில் அவர் ரொம்ப முக்கியமானவர்!”

Comments

comments