04-1446617808

கடந்த ஜூலை 17 அன்று ரிலீஸாகி இந்திய முழுவதும் பெரும் வெற்றி கண்ட படம் பஜ்ராங்கி பாய்ஜான். 300 கோடிக்கும் மேல் வசூலில் திலைத்தது. எனினும் சல்மான் கான் நடிப்பில், மாபெரும் வெற்றி கண்ட இப்படத்தை வெறும் 2 சதவிகித மக்களே திரையரங்குகளில் பார்த்துள்ளனர் என்ற அதிர்ச்சி கரமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ஜனத்தொகையில் 130 கோடி. ஆனால் சென்ற மாதம் இப்படம் டிவியில் ஒளிபரப்பான போது 74.5 மில்லியன் மக்கள் அந்த சேனலை டியூன் செய்துள்ளனர்.படம் பார்க்கும் ஆர்வம் இருந்ததால் தான் மக்கள் அந்தக் குறிப்பிட்ட டிவியைப் பார்த்துள்ளனர்.

இதை பற்றி கார்னிவல் சினிமாஸின் இயக்குநர் சுனில் கூறுகையில், இன்னும் மக்களை திரையரங்குகளில் படங்களை பார்க்க வரவழைப்பதன் மூலம் மட்டுமே இந்திய சினிமாவின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.சில இடங்களில் மக்கள் 50 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்து தான் திரையரங்குகளில் படம் பார்க்கவேண்டியுள்ளது. இதற்கு ஒரே தீர்வு டெக்னாலஜி, திரையரங்குகள் போன்றவற்றை அதிகபடுத்துதல் மூலம் மக்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பதே ஒரே வழி எனக் கூறியுள்ளார்.

பெரும் வசூல் சாதனை, பெரும் வெற்றி என்று நாம் கொண்டாடும் படங்களின், உண்மையான கணக்கு வெறும் சொற்பமே. சல்மான்கான் , ஷாருக்கான் , போன்ற கான்களின் இந்திப்படங்களுக்கே இந்த நிலை எனில் ஒரே மாநில வருமானத்தை மட்டுமே பிரதானமாக கொண்ட தென்னிந்திய சினிமாக்களின் படங்கள் வருமானம் என்பது ஒரு போராட்டமான வசூலே. 2 சதவீத மக்கள் தியேட்டரில் படம் பார்த்தமைக்கே இங்கே ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் 100 கோடிகளை தொடும் நிலை ஏற்படுமாயின் ஒரு 10 சதவீத மக்கள் தியேட்டருக்கு அதிகமாக வந்தாலே சர்வ சாதரணமாக இவர்களின் படங்கள் அனைத்தும் 100 கோடி, 300 கோடி க்ளப்பில் இணையும் என்பது உறுதி. யோசிக்குமா அரசுகள்.

Comments

comments