12271402_919671938069307_1522235000_o

நேர்முகம் படப்பிடிப்பில் நடிகை மீனாட்சி உதவி இயக்குநரை அடித்ததில் அவர் மயக்கத்திற்கு ஆளானார் இதனால் படக்குழுவினர் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே விடுவோம் என மீனாட்சியை அடைத்து வைத்துவிட்டனர்.

நேர்முகம் படப்பிடிப்பு எம் ஜி ஆர் ஃபிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இந்தப்படப்பிடிப்பு தளத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து மீனாட்சி மன்னிப்பு கேட்கும்வரை விடமாட்டோம் என படப்பிடிப்பு தளத்தைவிட்டு வெளியேறவிடாமல் வைத்திருந்தனர்.

இந்நிலையில் மீனாட்சி தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அதை மீடியாவிற்கு காண்பித்துள்ளார். அதில் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், மேலும் இது போல் இனி என்னால் தவறு நடக்காது. என்னை தயவு கூர்ந்து மன்னிக்கவும் என எழுதியுள்ளார் மீனாட்சி .இவ்வாறு மீனாட்சி மன்னிப்பு கேட்டபிறகு படப்பிடிப்பு குழுவினர் கலைந்து சென்றனர்.

12283152_919671971402637_460073791_n

Comments

comments