04-1446617808

கபாலி படத்தின் படப்பிடிப்பில் மலேசியாவில் படு பிசியாக இருக்கிறார் ரஜினி. கபாலி படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தபின் ரஜினிகாந்த் அங்கிருந்து அப்படியே அமெரிக்கா செல்லவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அங்கு ஷங்கரின் எந்திரன் படத்தின் பட வேலைகளில் கலந்துகொள்ள இருக்கிறார் ரஜினிகாந்த். ஏற்கனவே எமி ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்ஸில் ஒத்திகையில் கலந்துகொண்டுள்ளார். இதில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான ஒத்திகைகளும் நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் கமல்ஹாசனும் தனது அடுத்த படத்திற்கு அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

அமலா அக்கினேனி, ஸரினா வஹாப்யுடன் கமல் இணைந்து நடிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. எனவே இரு மெகா நடிகர்களின் படப்பிடிப்புகளும் ஒரே சமயத்தில் அமெரிக்காவில் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

Comments

comments