04-14466178083

ஒருகல்ஒருகண்ணாடி, இதுகதிர்வேலன்காதல், நண்பேன்டா ஆகிய மூன்றுபடங்களைத் தொடர்ந்து நான்காவதாக உதயநிதி நடித்துக்கொண்டிருக்கும் படம் கெத்து. சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்குகிறார்.

இந்தப்பெயரும் இயக்குநர் மற்றும் கதாநாயகனையும் வைத்துப் பார்க்கும்போது இதுவும் உதயநிதியின் முந்தைய படங்களைப் போலவே நகைச்சுவையை மையப்படுத்திய படமாக இருக்கலாம் என்று பலரும் நினைத்திருந்தனர். அவர்களையெல்லாம் நேற்று வெளியான கெத்து படத்தின் முன்னோட்டம் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தப்படத்தில் உதயநிதி ஆக்ஷன்ஹீரோவாகியிருக்கிறார். முதல்மூன்று படங்களிலும் நகைச்சுவையை மையப்படுத்திய கதைகளையே தேர்ந்தெடுத்திருந்த உதயநிதி நான்காவது படத்தில் ஆக்ஷன் கதையில் நடித்திருக்கிறார். உதயநிதி தனக்கான வேடத்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறவர். அவருக்கு இருக்கிற வசதிவாய்ப்புக்கு அவர் என்னவாக வேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நடிக்கவேண்டும் என்று மிகக்கவனமாக இருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார். அப்படி நினைப்பவர் ஆக்ஷன் கதையைத் தேர்ந்தெடுத்தது எப்படி? என்கிற கேள்வி பலருக்கு எழுந்தது. அதற்கு உதயநிதியின் டிவிட்டரிலேயே விடை இருக்கிறது. நேற்று அவருடைய பிறந்தநாள். அதையொட்டி திரையுலக பிரபலங்கள் அவருக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்துச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

வாழ்த்துச் சொன்னவர்களுக்கு உடனுக்குடனே நன்றி சொல்லிக்கொண்டிருந்தார் உதயநிதி. இயக்குநர் முருகதாஸூம் உதயநிதிக்கு வாழ்த்துச் சொன்னார். அதற்கு நன்றி சொன்னதோடு, கெத்து படம் உருவாக நீங்கள்தான் முக்கியமான காரணம், வித்தியாசமான முயற்சியில் நான் இறங்க நீங்கள் கொடுத்த நம்பிக்கையே காரணம் என்று சொல்லியிருக்கிறார்.

Comments

comments