கேப்டன் அடுத்த இன்னிங்ஸ் ஆடத் தயாராகி விட்டார். படத்துக்குப் பெயர் வைத்து , ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிவிட்டது. கடும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் இந்தப் படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்.

vijay cari

1. போஸ்டரை பார்க்கும் போது கேப்டன் வரும் காட்சிகள் மன்னர் காலத்தில் நடப்பது போன்று இருக்கும் எனத் தெரிகிறது. எனவே படத்தில் காட்டப்படும் ராஜ்ஜியத்தின் கொடி தே.மு.தி.க கொடி போல இருக்கும் என எதிர்பார்க்கலாம். படத்தில் கேப்டன் கண்களுக்கு க்ளோஸ் அப், முரசுக்கு ஒரு க்ளோஸ் அப் காட்சிகள் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம், ஆரம்பத்தில் ஏழையாக வரும் காட்சியில் கூட அந்த தேமுதிக கொடி போட்ட மோதிரத்துடன் மக்கழே… என என்ட்ரி கொடுப்பார் கேப்டன்.

2.நிறைய நாளைக்கு அப்புறம் சமீபத்தில்தான் கேப்டன்  ஒருத்தரை அடித்து செம ஃபார்மில் இருக்கிறார். எனவே, ஆக‌ஷன் காட்சிகள் அனல் பறக்கும். அரண்மனை தூண்களில் லெஃப்ட் காலை வைத்து ரைட்டு காலால் வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளை பல வருடங்கள் கழித்து மறுபடியும் பார்க்க ஆசி கிட்டும் என எதிர்பார்க்கலாம் . விருத்தகிரி படத்தில் ஒரே குத்தில் இருபது பேரை வீழ்த்தியதைப் போல இதிலும் டெரரான சண்டைக்காட்சிகள் ஆக‌ஷன் வடிவமைப்பு ‘ஸ்டன்ட்’ சில்வா என்பதால் தூக்கி அடிக்கிற கேப்டனை விடத் தூக்கி போட்டு அடிக்கிற கேப்டனை நிச்சயம் பார்க்கலாம்.

3. கேப்டன் சமீப காலமாக சைகையிலேயே பேசி வருவதால், பாடி லாங்வேஜில் பின்னி எடுப்பார் எனலாம்.
vijay cari 1மன்னர் காலத்து படமாக இருந்தால் ஆங்கிலம், ஹிந்தி பேசும் கட்டாயமும் கேப்டனுக்கு இருக்காது. ஐஸ் படுக்கைக்குப் பதில், ஆணிப் படுக்கை, கொதிக்கும் எண்ணைக் குளியல் என பெர்ப்பாமென்ஸ் பின்னுவார் எனத் தெரிகிறது. ஒரு காட்சியில்; தீபாவளிக்கு வெடி வெடிப்பதைக் கூட கண்ணீர் கசிய கேப்டன் ரசிப்பது காண்போரை கதற வைக்கும் என எதிர்பார்க்கலாம்

4. தமிழ்நாட்டின் தற்போதைய நிலையை, கண் சிவக்க கேப்டன் பேசும் காட்சிகள் கண்டிப்பாக இடம் பெறலாம். நாடக நடிகர் சங்க தலைவராக இருந்து கொடுங்கோல் ராணிக்கு எதிராக ரவுண்ட் ட்ராலியில் பக்கம்பக்கமாய் பேசு வசனமாகட்டும், இடக்கு மடக்காகக் கேள்வி கேட்கும் நபர்களிடம் ‘அவங்க கிட்டப் போய் கேளியா’ என நெற்றியடி பதில் சொல்லி திணற அடிப்பார் என உறுதி. ஆங்…

5. இதில் ‘வைஸ் கேப்டன்’ சண்முகப்பாண்டியன் புரட்சிப்படை தலைவராக வருகிறார். அவரை காந்திய வழிக்குக் கொண்டுவர “கைகளை முறுக்கி”  அக்ரோஷமாய் பாட்டுப்பாடுகிறார். ‘நான் புரட்சிப்படையை கலைத்துவிடுகிறேன்,பாட்டு மட்டும் பாட வேண்டாம்” என சண்முகப்பாண்டியன் வழிக்கு வருகிறார். அவரிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு  டெல்லி சுல்தானுக்கு எதிராக அரசியல் செய்ய புறப்படுவார் கேப்டன்.

Comments

comments