2

கலைப்புலி தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கும் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு முதலில் மூன்று முகம் என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டதாகவும், அந்த டைட்டிலை சத்யா மூவிஸ் நிறுவனம் தர மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் காக்கி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்ல, தீபாவளி அன்று காக்கி என்ற தலைப்பை அதிகாரபூர்வமாக அறிவிப்பதோடு, அப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கையும் வெளியிட உள்ளதாக சொல்லப்பட்டது. அது வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.

பின்னர் விஜய் 59 படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார் ஒரு பேட்டியில் கூறியதை அடுத்து படத்தின் பெயர் தாறு மாறு என்ற தகவல் வெளியானது. அதையே விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் அனைவரது யூகங்களையும் பொய்யாக்கி தான் இயக்கி வரும் படத்துக்கு ‘தெறி’ என்று தலைப்பு வைத்துள்ளார் அட்லி. இதை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அட்லி. அறிவித்த சில மணிநேரங்களுக்குள்ளேயே இந்திய அளவில் தெறி டைட்டிலை டிரண்டிங்கில் கொண்டு வந்துவிட்டனர் விஜய் ரசிகர்கள்.

 

Comments

comments