04-144661780815

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து சிங்கம்3 எடுக்கவிருக்கிறார்கள். சூர்யா தற்போது நடிக்கும் 24 படத்தை முடித்துவிட்டார் என்றும் விரைவில் சிங்கம்3 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.

இந்தப்படத்தில் அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பிரியன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். சிங்கம்3 படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம்.

ஹாரிஸ்ஜெயராஜ் சிங்கம்3 படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்பாக விக்ரம் நடித்த சாமி படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்போது மீண்டும் இணைகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

ஏன் இந்த மாற்றம்? என்று கேட்டால், இயக்குநர் ஹரியின் வேகத்துக்கு அனிருத்தால் ஈடுகொடுக்க முடிந்திருக்காது என்பதால் இந்த மாற்றம் நடந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

Comments

comments