asநடிகை சமந்தாவிற்கு ‘கத்தி’ படம் தமிழில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதற்கு முன் அவர் நடித்து வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. தெலுங்கில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் ரீமேக்கில் நடித்தவருக்கு அதன் பின் அங்கு வெளிவந்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறினார். ஆனாலும், தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். அதை ‘கத்தி’ படம் மாற்றி விட்டது.

தற்போது விக்ரமுடன் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. அடுத்து தனுஷுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த ஆண்டு தமிழில் 3 படங்களிலும், தெலுங்கில் 3 படங்களிலும் நடிக்கப் போகிறேன் என சமந்தா தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் டுவிட்டரில் சாட் செய்தபோது அவர் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவருடைய திருமணத்தைப் பற்றி ஒரு ரசிகர் கேட்ட போது அந்த ‘சாப்டர் முடிவுக்கு வந்துவிட்டது,” என்று கூறியிருக்கிறார். சித்தார்த், சமந்தா இருவரும் பிரிந்துவிட்டதாக சில வாரங்களுக்கு முன்னர்தான் செய்திகள் பரபரப்பாக வெளியாகின. அதோடு, ‘பெங்களுர் டேய்ஸ்’ படத்தின் ரீமேக்கிலும் தான் நடிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் சித்தார்த் – சமந்தா இருவரும் சேர்ந்து நடிக்கப் போவதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

சமந்தா தொடர்ந்து தமிழில் அதிக கவனம் செலுத்தப் போகிறார் என்றும் சொல்கிறார்கள். அஜித்தின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஆர்வமாக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமந்தா சொல்லியுள்ள 3 படங்களில் இந்த படமும் ஒன்றா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

Comments

comments