Pulan-Visaranai-2-2015-Watch-online-640x256 (1)ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த், கார்த்திகா, ஆர்கே மற்றும் பலர் நடித்து ஜனவரி 29ம் தேதியன்று வெளிவந்த திரைப்படம் ‘புலன் விசாரணை 2′. பல வருடங்களாக கிடப்பில் இருந்த இந்தப் படம் ஒரு வழியாக வெளியானது. ஆனால், இப்படத்திற்காக கொடுக்கப்படும் விளம்பரங்களில் எந்த ஒரு நட்சத்திரமும் இடம் பெறவில்லை. பொதுவாக எந்த ஒரு படம் வெளியானாலும், அந்தப் படத்தின் நாயகன் முகத்தையாவது படங்களின் விளம்பரங்களில் இடம் பெறச் செய்வார்கள். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் விளம்பரங்களில் எந்த ஒரு புகைப்படமும் இல்லாமல் வெறும் எழுத்துக்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

தெரிந்த முகங்கள் நடித்து வெளிவரும் படங்களுக்கே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வராத சூழ்நிலையில் பல வருடங்களாக திரையுலகில் நாயகனாக இருக்கும் பிரசாந்த் புகைப்படத்தை விளம்பரங்களில் இடம் பெறச் செய்யாமலிருக்க என்ன காரணம் எனத் தெரியவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களும் படம் சமூகக் கருத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படத்தில் நடித்துள்ள அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள் என்று கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். படம் வெளிவருவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும், படம் வெளியாக நல்ல வரவேற்பைப் பெறும் போது பிரச்சனைகளை மறந்துவிட்டு படத்தை இன்னும் நன்றாக ஓட வைக்கவே அனைவரும் முயல்வார்கள். அல்லது, விளம்பரத்தை வித்தியாசமாக இருக்கட்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

என்ன இருந்தாலும் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் போது அதற்குச் சரியான விளம்பரத்தைக் கொடுத்தால் இன்னும் அதிகம் பேசப்படுமே…!

 

Comments

comments