asகடந்த இரண்டு நாட்களாக சிம்பு ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயமாக ‘வாலு’ படம் அமைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சிம்பு நடித்துள்ள ‘வாலு’ படம் இந்த மாதமாவது வெளிவருமா என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். ஏனென்றால், படத்தின் தயாரிப்பாளரான சக்கரவர்த்தி நவம்பர் மாதமே ‘வாலு’ படம் சிம்புவின் பிறந்த நாளான இன்று வெளிவரும் என்று சொல்லியிருந்தார். ஆனால், அதன் பின் அந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு எதுவுமே இல்லை.

இதனிடையே, இன்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாலு’ படத்தின் புதிய டீசரை நேற்று இரவு வெளியிட்டார்கள். ‘நயன்தாரா வேணாம்.. அந்த ஆன்ட்ரியாவும் வேணாம்…’ என்ற ‘பெப்பியான’ ஒரு பாடலின் டீசராக அது இடம் பெற்றுள்ளது. அந்தப் பாடலில் சிம்புவும், ஹன்சிகாவும் நடித்துள்ளார்கள். வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை அந்த டீசர் பெற்றுள்ளது.

கடந்த சில வருடங்களாக தயாரிப்பில் இருந்த ஒரு படம் ஒரு வழியாக திரைக்கு வரும் நாளையும் அந்த டீசரில் குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படி ‘வாலு’ படம் மார்ச் 27ம் தேதி வெளியாக உள்ளது. முழு ஆண்டுத் தேர்வுகள் அப்போதுதான் முடிவடையும் கட்டத்தை நெருங்கியிருக்கும். ஆக, நாம் ஏற்கெனவே சொன்னபடி ‘வாலு’ முன்னே வருகிறது…அதற்குப் பிறகு ‘இது நம்ம ஆளு’, கோடை விடுமுறையில் வரும் எனத் தெரிகிறது.

 

Comments

comments