asவிஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் நடிப்பில், வௌியாக இருக்கும் படம் ”உத்தம வில்லன்”. கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் கே.விஸ்வநாத், ஊர்வசி, நாசர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் இரண்டு விதமான காலக்கட்டத்தில் பயணிக்கிறது. கமல் கூத்து கலைஞராகவும், நடிகராகவும் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடாக்ஷ்ன்ஸ் வேலைகள் எல்லாம் நடந்து வந்தது. விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட சில பணிகளுக்காக சமீபத்தில், கமல் அமெரிக்கா சென்று திரும்பினார். தற்போது டப்பிங் பணிகள் முழுமூச்சாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ”உத்தமவில்லன்” படத்தின் ஆடியோவை மார்ச் 1ம் தேதி வௌியிட இருப்பதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவரும் என நம்பப்படுகிறது. இசை வௌியீட்டு விழாவை தொடர்ந்து மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரலில் படம் ரிலீஸாகும் என தெரிகிறது.

 

Comments

comments