bomb-blast-on-s-v-sekar-s-house-0821a1ccசினிமாவில் ஹீரோவாக, கேரக்டர் ஆர்டிஸ்டாக ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் எஸ்.வி.சேகர். அதோடு, அவ்வப்போது நாடகங்களையும் நடத்தி வரும் அவர், அரசியலிலும் பிரவேசித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது சென்சார் போர்டு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதையடுத்து, இதுவரை அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர், தற்போது சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அப்போது, ஒரு படத்தை எடுப்பதற்கு முன்பு அந்த டைரக்டர்கள் எந்த மாதிரியான விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை தனது சார்பில் சொல்கிறார் எஸ்.வி.சேகர், அவர் கூறும்போது, சினிமா என்பது வியாபாரத்தை முன் வைத்துதான் எடுக்கப்படுகிறது. என்றாலும், அந்த படத்தை பொது மக்கள் பார்ப்பதால், அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும்.

முக்கியமாக, குழந்தை குட்டிகளுடன் குடும்பத்துடன் பார்ககும் படங்களுக்கு யு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. அதேசமயம், குழந்தைகளை தவிர்த்து விட்டு பார்க்க வேண்டிய படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. அதனால் கதை ரெடி பண்ணுபவர்கள், எந்த அடிப்படையில் படங்களுக்கு சென்சார் செய்யப்படுகிறது என்பதை அதற்கான புத்தகத்தை படித்து தெரிந்து கொண்டு ஸ்கிரிப்ட் தயார் செய்வது நல்லது. அப்படி செய்தால், படம் திரைக்கு வரும் நேரத்தில் காட்சிகளை கத்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்கிறார்.

Comments

comments