asஉலகம் சுற்றும் இசை நாயகனாக ஏ.ஆர்.ரகுமான் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தியிலும், ஹாலிவுட்டிலும் தன்னுடைய இசைத் திறமையை பரப்பிக் கொண்டிருப்பவர். உலக அளவில் ஈரானிய திரைப்படங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஏன், நம் இயக்குனர்களே ஈரானிய படங்களைப் பற்றி அப்படி புகழ்ந்து பேசுவார்கள். அப்படிப்பட்ட ஈரானிய திரையுலகத்தின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மஜித் மஜிதி தற்போது இயக்கி வரும் ‘முகம்மது’ என்ற ஈரானிய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்திற்கான இசைப்பதிவு தற்போது பாரீஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது.

புகழ் பெற்ற பாரம்பரிய பாலஸ்தீனிய இசையைக் கொடுக்கும் கலைஞர்களான ‘லீ டிரியோ ஜோப்ரன்’ ஆகியோருடன் இணைந்து ரகுமான் இசைப்பதிவை நடத்தி வருகிறார். அண்ணன் தம்பிகளான சமீர், விசாம், அட்னான் ஆகியோர்தான் ‘லீ டிரியோ ஜோப்ரன்’ என அழைக்கப்படுபவர்கள்.

‘முகம்மது’ படம் நபிகள் நாயகத்தின் சிறு வயதுப் பருவத்தை மையமாகக் கொண்ட கதையாக உருவாகி வருகிறது. “பெர்சியன், அராபிக், ஆங்கிலம்” ஆகிய மொழிகளில் இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது.

 

Comments

comments