shine-annayum-rasoolum.jpg.image.784.410தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டியதுபோல ஆகிவிட்டது போதைப்பொருள் பயன்படுத்தியதாக மலையாள நடிகர் டாம் சாக்கோ கைது செய்யப்பட சம்பவம். டாம் சாக்கோ கடைசியாக நடித்த படம் ‘இதிகாசா’.. இந்தப்படத்தில் அவர் நடித்ததால் தற்போது அந்த படக்குழுவினரும் போலீசாரின் சந்தேக வட்டத்தில் சிக்கியுள்ளார்கள்.. அதற்கேற்ற மாதிரி பொதுமக்களும் கூட இவர்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ என்கிற ரேஞ்சில் தான் ஏளனமாக பார்க்கிறார்களாம்..

கடந்த வருடம் வெளியான ‘இதிகாசா’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.. சினிமாவிற்கு சற்றும் தொடர்பில்லாதவரான ராஜேஷ் அகஸ்டின் என்பவர் தயாரித்த இந்தப்படம் அதற்கேற்ற சன்மானத்தை பாராட்டுகளாலும் வசூலாலும் வாரி வழங்கியது. ஆனால் இப்போது அடுத்த படத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து செயல்பட்டு வந்த வேளையில் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டதால், அதை தொடர்ந்து இந்தப்படக்குழுவினருக்கும் போலீஸார் கெடுபிடிகளை விதித்துள்ளனர்.

“எங்கள் குடும்பம் அமைதி என்கிற வார்த்தையையே மறந்துவிட்டது. எங்கள் படக்குழுவினர் கண்காணிக்கப்படுகிறார்கள்.. எங்கள் வீட்டிற்கு எட்டு மணிக்கு மேல் உறவினர்கள், நண்பர்கள் வர போலீஸார் தடைபோட்டுள்ளனர். என் மனைவிக்கும் அம்மாவுக்கும் வரும் போன்கால்களில் பெரும்பாலானவை எனக்கும் இதில் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை விசாரிப்பதாகவே இருக்கிறது. நாங்கள் வீட்டிலிருந்து வெளியே போய்வருவதற்கும் பணத்தை பயன்படுத்துவதற்கும் கூட நிபந்தனைக்கு ஆளாகியிருக்கிறோம். ஏண்டா இந்தப்படத்தை எடுத்தோம் என இப்போது நினைக்கிறேன்” என குமுறுகிறார் தயாரிப்பாளர் ராஜேஷ் அகஸ்டின்.

 

Comments

comments