asதமிழ் சினிமாவைப்பொறுத்தவரை சத்யராஜ்தான் அதிக உயரமான நடிகராக நீண்டகாலமாக இருந்து கொண்டிருந்தார். அவருடன் நடித்த பல ஹீரோக்கள் அவரை அண்ணாந்து பார்த்துதான் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமான நெப்போலியன் அவரை விட உயரமாக இருந்தார். அதனால் கோடம்பாக்கத்தில் அதிக உயரமான நடிகர் என்ற இடத்தில் இருந்த சத்யராஜை பின்தள்ளி முதல் உயரமான நடிகராக திகழ்ந்து கொண்டிருநதார் நெப்போலியன்.

ஆனால், இப்போது சகாப்தம் படத்தில் நடித்துள்ள விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன், உயரத்தில் அவர்கள் இரண்டு பேரையுமே மிஞ்சி விட்டார். அதாவது 6.4 இருக்கிறார். அந்த வகையில், இந்தி நடிகர் அமிதாப் பச்சனை எட்டிப்பிடித்து விட்டார் சண்முகப்பாண்டியன். அதனால் சகாப்தம் படத்தின் ஆடியோ விழாவில் அமிதாப் பச்சனை முன்மாதிரியாக கொண்டு சண்முகப்பாண்டியன் நடிக்க வேண்டும் என்று சிலர் அவரை வாழ்த்தி பேசினார்கள்.

மேலும், சண்முகப்பாண்டியனை வாழ்த்தி பேசும்போது அவரை தங்கள் அருகே அழைத்த சத்யராஜ்-நெப்போலியன் இருவருமே அவர் தங்களை விட உயரமாக இருக்கிறார் என்பதை அருகில் நின்று பார்த்துக்கொண்டனர். அந்த வகையில், சத்யராஜ், சற்று தலையை தூக்கித்தான் சண்முகப்பாண்டியனின் முகத்தை பார்த்தார். அந்த அளவுக்கு உயரமாக இருந்தார் சண்முகப்பாண்டியன்.

ஆக, தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவிலுள்ள ஹீரோக்களில் அதிக உயரம் கெண்டவராக நம்பர் ஒன்னில் இருக்கிறார் சண்முகப்பாண்டியன்.

Comments

comments