asசெக் மோசடி வழக்கில் தனுஷின் அப்பாவும், இயக்குநருமான கஸ்தூரி ராஜாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோவிலிலே, நாட்டுப்புறப்பாட்டு, என் ஆசை ராசாவே உள்ளிட்ட கிராமத்து மண் சார்ந்த படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. இயக்குநர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷின் அப்பாவான இவர், கடந்த 2012ம் ஆண்டு சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்திரா என்பவருடன் ரூ.65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக முகுன் சந்த்திற்கு இரண்டு செக் கொடுத்துள்ளார் கஸ்தூரி ராஜா. ஆனால் செக்கை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது. இதனையடுத்து அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் முகுந் சந்த்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி கோதண்டராஜ் முன்னிலையில் வந்தது. ஏற்கனவே பலமுறை கஸ்தூரி ராஜாவை நேரில் ஆஜராக சொல்லி உத்தரவிட்டு அவர் ஆஜராகவில்லை. இன்றும் அதேநிலை தொடர்ந்ததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கை பிப்ரவரி 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

Comments

comments