asதெனாலிராமனுக்கு பிறகு இனிமேல் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருக்கிறார் வடிவேலு. அவரைத் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவான சந்தானமும் ஹீரோ இமேஜை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். லிங்கா, ஆம்பள போன்ற சில படங்களில் காமெடியனாக நடித்தபோதும், யாராவது புதிய படங்களுக்காக காமெடி கேரக்டர்களுடன் சென்றால், அந்த கேரக்டரை வெயிட் பார்க்கிறாராம்.

அதாவது,.காமெடியனாக அந்த கேரக்டரை டைரக்டர்கள் சித்தரிந்திருந்தபோதும், அது அப்படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கு இணையானதாக இருக்க வேண்டும் என்கிறாராம் சந்தானம். உதாரணத்திற்கு இப்போது ஆர்யாவுடன் நடிக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை சுட்டிக்காட்டி, இந்த படத்தில ஆர்யாவும், நானும் சம அளவுள்ள வேடங்களில்தான் நடிக்கிறோம். படத்தின் டைட்டிலிலேயே நானும் ஒரு ஹீரோ என்பது தெரிகிறது.

ஆக, நான் காமெடியன் என்றாலும் இரண்டு ஹீரோ போன்றுதான் நடிக்கிறேன். அதனால், இனிமேல் காமெடி காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் சந்தானமாக இல்லாமல், இரண்டு ஹீரோ போன்று உருவாக்கப்படும் கதைகளில் மட்டுமே நடிப்பேன். இல்லையேல் நானே சோலோ ஹீரோவாக நடிப்பேன் என்கிறார்.

சந்தானத்தின் இந்த முடிவு காரணமாக, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருக்கும் சூரி, சிங்கம்புலி, கருணாஸ் போன்ற காமெடியன்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களது காமெடியன மார்க்கெட்டை டெவலப் பண்ணிக்கொள்ளும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளனர்.

Comments

comments