asஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் வெற்றிகரமாக 100வது நாளைக் கடந்திருக்கிறது. 2014ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக ‘கத்தி’யும் அமைந்துவிட்டது என படத்தைத் தயாரித்த நிறுவனம் சொல்லி வருகிறது. கடந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் 100 நாட்களைக் கடந்த படங்களாக ‘கோலி சோடா, வேலையில்லா பட்டதாரி, கத்தி’ ஆகிய படங்களே அமைந்தன. அதுவே ஒரு விதத்தில் மாபெரும் வெற்றிதான். இப்போதெல்லாம் 50 நாளைத் தாண்டினாலே வெற்றி விழா கொண்டாடிவிடலாம்.

‘கத்தி’ படம் 100வது நாளைத் தொட்டுள்ள நிலையில் அந்தப் படத்தின் சில முக்கிய காட்சிகளுக்கான பின்னணி இசையை படத்தின் இசையமைப்பாளரான அனிருத் அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 6 காட்சிகளுக்கான 12 நிமிடத்திற்கான பின்னணி இசை வெளியிடப்பட்டுள்ளது. ‘கதிரேசன் வருகை, கத்தி டைட்டில் இசை, இன்டர்வியூ சண்டைக் காட்சி, தானூத்து கிராமம், கத்தி என்கிற கதிரேசன், காய்ன் சண்டைக் காட்சி தீம், ஆகிய 6 காட்சிகளுக்கான பின்னணி இசை வெளியிடப்பட்டுள்ளது.

‘கத்தி’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அனிருத் தற்போதைய இளம் இசையமைப்பாளர்களில் மிக வேகமாக முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார். அடுத்து ஷங்கர் இயக்கப் போகும் படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என்று செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன.

 

Comments

comments