Yennai-Arindhaal-Overseas-Theater-List-326x159அஜித் நடித்த படங்களிலேயே என்னை அறிந்தால் படம்தான் அவருக்கு மைல்கல்லாக அமைய உள்ளது. இதுவரை அஜித் நடித்த படங்கள் உலகம்மெங்கும் 1000 தியேட்டர்களைக் கூட எட்டியதில்லை. முதன்முறையாக, உலகமெங்கும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் என்னை அறிந்தால் படம் வெளியாகிறது.

அஜித் நடித்த படம் என்றாலே தமிழகத்தில அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாவதும், அப்படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங்கும் கிடைப்பதும் புதிய நிகழ்வு அல்ல, வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இந்தமுறை தமிழகத்தைத் தாண்டியும் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது – என்னை அறிந்தால். கேரளாவில் மட்டும் 200 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அஜித் படத்தைப் பொறுத்தவரை கேரளாவில் இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை. பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவரான எம்.ஜி.நாயர் என்பவர் என்னை அறிந்தால் படத்தின் கேரள விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார்.

என்னை அறிந்தால் படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை அட்மாஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அங்கே 100 திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அட்மாஸ். அமெரிக்காவைப்பொருத்தவரை இதுவும் அஜித் படங்களில் உச்சபட்ச எண்ணிக்கையாகும். அதேபோல் யுகேவில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது ஐங்கரன் நிறுவனம். அது மட்டுமல்ல, இதுவரை தமிழ்ப்படங்களே வெளியிடப்படாத அதே நேரம் தமிழர்கள் வசிக்கும் பல வெளிநாடுகளிலும் என்னை அறிந்தால் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

 

Comments

comments