asகௌதம் மேனன் – அஜித் முதன் முறையாக இணையும் படம்.

அஜித்துடன் அனுஷ்கா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.

ஜி, கிரீடம், மங்காத்தா படங்களுக்குப் பிறகு அஜித் – த்ரிஷா நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம்.

கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவரும் ஆறாவது படம்.

அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முறையாக இசையமைத்துள்ளார்.

படத்தில் அஜித்தின் கதாபாத்திரப் பெயர் சத்யதேவ். நான்கு விதமான தோற்றங்களில் அஜித் நடித்துள்ளார்.

அனுஷ்காவின் கதாபாத்திரப் பெயர் தேன்மொழி, த்ரிஷாவின் கதாபாத்திரப் பெயர் ஹேமனிகா.

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த டான் மெக்கார்தர் ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரைலர் இரண்டுமே யு டியூப் இணையதளத்தில் மிகப் பெரும் சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் இப்படம் 95 திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவும் தயாராக இருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் அறிவித்துள்ளார்.

Comments

comments