Simbu-sadபாம்புக்கு வாலையும் எலிக்கு தலையையும் காட்டுகிற வித்தை தெரிந்தவர்கள் தமிழ் படங்களில் பிழைத்துக் கொள்கிறார்கள். சிம்புவின் அண்மைக்கால அடவு சடவுகளை பார்த்தாலும் அப்படிதான் தோன்றுகிறது. முன்பெல்லாம் ‘நான் தல ரசிகன்’ என்று கூறிவந்தவர், சில மாதங்களுக்கு முன் லேசாக விஜய்க்கும் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்ததை அஜீத் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள்.

அதெல்லாம் பழைய கதை. இப்போது ‘என்னை அறிந்தால்’ படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு செம ஆட்டமாக ஒரு ட்விட் பண்ணியிருக்கிறார். அது இதுதான். “ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ் படம் பார்த்துள்ளேன். தல அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்”

சிம்பு எப்பவுமே அதிரடி என்பதற்கு இந்த ட்விட் ஒன்று போதும். இந்த படத்தை நன்றாக இல்லை என்று சொல்பவர்கள் லூசுடா லூசு என்பதைதான் அவ்வளவு நாகரீகமாக சொல்லியிருக்கிறார். இந்த படத்தையும் மொக்கை என்று விமர்சிக்க ஒரு கூட்டம் இருக்குமல்லவா? அவர்கள் சிம்புவுக்கு பதிலடி கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரம் ஆரம்பித்திருப்பார்கள்.

Comments

comments