asதல அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் படம் வருகிற 5ந் தேதி வெளிவருகிறது. இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கியுள்ளது. படத்தை பற்றிய இறுதி முன்னோட்டம் இது…

* என்னை அறிந்தால், 13 வயதிலிருந்து 45 வயது வரையிலான ஒரு தனிமனிதனின் கதை.

* அஜீத் ஒரே கேரக்டர் இரண்டு கெட் அப்களில் நடித்துள்ளார். ஒன்று யூத் கெட்-அப். மற்றறொன்று சால்ட் அண்ட் பெப்பர் கெட்-அப். அஜீத் போலீசா, தாதாவா, அல்லது இரண்டுமா என்பது சஸ்பென்ஸ்.

* த்ரிஷா இளமைக்கால அஜீத்தின் மனைவியாகவும், அனுஷ்கா சால்ட் அண்ட் பெப்பர் அஜீத்தின் காதலியாகவும் நடித்துள்ளனர். இருவருக்குமே அஜீத்துடன் டூயட் பாடல் உள்ளது. இருவருக்கும் காமினேஷன் காட்சி கிடையாது.

* அஜீத் தொடர்ந்து 32 மணிநேரம் படத்திற்காக டப்பிங் பேசியது, தலையால் கண்ணாடியை உடைத்தல், கார் சேசிங், காரை ஏழு முறை சுற்றச் செய்து நிறுத்தல், என டூப் இல்லாமல் ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்திருக்கிறார்.

* பஞ்ச் டயலாக் என்று தனியாக எதுவும் கிடையாது என்றாலும் அஜீத் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் பன்ஞ் ஃபயர் இருக்கும்.

* இது அஜீத் படம் என்று கவுதம் மேனன் சொல்கிறார். கவுதம் மேனன் படம் என்று அஜீத் சொல்கிறார். ஆகையால் 50-50 என்பதே சரி.

* படத்தின் கதையை கேட்காமல் கவுதம் மேனனை நம்பி நடிக்க ஆரம்பித்தார் அஜீத். ஆனால் கிளைமாக்சில் அஜீத்துக்கு உடன்பாடில்லாமல் போக அவர் சொல்கிறபடி மாற்றினார் கவுதம்.

* படத்தின் நீளம் 176 நிமிடம் 48 விநாடிகள். அதாவது இரண்டு மணிநேரம் 56 நிமிடங்கள், 48 விநாடிகள்.

* படத்திற்கு தணிக்கை குழு அளித்திருக்கும் சான்றிதழ் யு/ஏ. அதாவது குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் பார்க்க வேண்டும் என்பது. பலவிதமாக போராடியும் யு கிடைக்கவில்லை. இதனால் படத்தின் வசூலில் 30 சதவிகிதம் அரசுக்கு வரியாகச் செல்லும்.

* தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 40 முதல் 50 தியேட்டர்களில் ரிலீசாகிறது.

ஆக, தல கவுண்டவுன் ஸ்டார்ஸ்….!

 

Comments

comments