asசிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலரது நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைத்துள்ள ‘வாலு’ படம் 2012ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. பல காரணங்களால் படப்பிடிப்பு அவ்வப்போது நடந்து ஒரு வழியாக கடந்த ஆண்டு முடிந்தது. இப்படத்தின் பாடல்கள், டீசர் ஆகியவை கூட வெளிவந்துவிட்டது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸை முன்னிட்டு படம் வெளிவரும் என்று நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார்கள். அடுத்த சில தினங்களில் இல்லை படத்தை பிப்ரவரி மாதத்திற்கு, சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டோம் என்றார்கள். ‘போடா போடி’ படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து எந்த படமும் வெளிவராமலே இருக்கிறது. இதனிடையே கடந்த மாதம் சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அந்த டீசர் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. கடந்த சில நாட்களாக இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அடுத்து படத்தின் இசை வெளியீடு நடக்க வேண்டும், அதைத் தொடர்ந்துதான் படத்தின் வெளியீடு பற்றியும் அறிவிப்பார்கள். இப்போதிருக்கும் சூழ்நிலையில் ‘இது நம்ம ஆளு’ படம் கோடை விடுமுறையில்தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முன்னர் அறிவிக்கப்பட்டபடி ‘வாலு’ படம் இந்த மாதமாவது வெளியாகுமா என்பது தெரியவில்லை. இது பற்றி அடுத்து வேறு எந்த அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

 

Comments

comments