asநீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.ஜே.ஆர்யா இயக்கி உள்ள படம் இசை. சாவித்ரி ஜோடியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். கடந்த 30ந் தேதி படம் வெளிவந்தது. இரண்டு இசை கலைஞர்களுக்கு இடையேயான ஈகோ மோதல் கதை. படத்தின் நீளம் 3 மணி நேரத்துக்கு சில நிமிடங்களே குறைவானது. படத்தில் இடைவேளைக்கு முன்பு வரும் எஸ்.ஜே.சூர்யா-சாவித்ரி காதல் காட்சியும், இடைவேளைக்கு பிறகு வரும் ஈகோ மோதல் காட்சிகளும் மிகவும் நீளம் என்ற விமர்சனம் வந்தது. இதனால் படத்தின் நீளத்தில் 7 நிமிடத்தை குறைத்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் ஆபரேட்டர்களே 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை குறைத்து விட்டார்களாம். குறிப்பாக காதல் காட்சிகள் ஆபரேட்டர்களின் கத்தரிக்கு பலியாகி இருக்கிறது.

 

Comments

comments