as‘என்னை அறிந்தால்’ படம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியே கசிந்து வருகிறது. படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி வெளியிட்டுள்ள ‘பாசிட்டிவ்’ கருத்துக்களால் படத்தைத் திரையிட பலரும் முன் வந்து கொண்டிருக்கிறார்களாம். படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே இருந்தாலும் மல்டிபிளக்ஸ்களில் பல திரையரங்குகளில் படத்தைத் திரையிட முடிவு செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது. சென்னையைத் தவிர வெளியூர்களிலும் ஒரே வளாகத்தில் இரண்டு அல்லது மூன்று திரையரங்குகள் உள்ளன. அங்கெல்லாம் அனைத்து திரையரங்குகளிலும் ‘என்னை அறிந்தால்’ படத்தையே திரையிட தியேட்டர்காரர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

தியேட்டர்காரர்கள் எப்படியாவது படம் எப்படியிருக்கிறது என்ற விவரத்தை எங்கிருந்தாவது தெரிந்து கொள்வதுதான் வழக்கம். முன்பெல்லாம் படத்தைத் திரையிட்ட பிறகே விலையை நிர்ணயிப்பார்கள். பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு அப்படி நடக்காது. அதனால், படத்தைப் பற்றி வெளி வரும் ‘டாக்’கை வைத்தே படத்திற்கான விலையையும் முடிவு செய்வார்கள். அந்த விதத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தைப் பார்த்தவர்கள், படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கணித்திருக்கிறார்களாம். இந்தத் தகவல் வெளிவந்து விட்டதால், எப்படியும் படத்தைப் பெற்று திரையிட வேண்டும் என்ற போட்டியு அதிகரித்திருக்கிறதாம்.

ஜனவரி மாத வெற்றிப் படமாக ‘ஐ’ படம் அமைந்ததைப் போல் பிப்ரவரி மாதத்தில் ‘என்னை அறிந்தால்’ படம் அமையும் என்கிறார்கள்.

 

Comments

comments