asசமீபகாலமாக விஜய் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது அஜித் நடிப்பில் வெளியாகயிருக்கும் என்னை அறிந்தால் படம் வெளியாக இருக்கும் சென்னையில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இருப்பினும், வருகிற 5-ந்தேதி வியாழக்கிழமை அன்று என்னை அறிந்தால் படம் வெளியாவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில, படத்தை வரவேற்க தயாராகி விட்ட அஜீத் ரசிகர்கள், போஸ்டர், கட்அவுட், தோரணங்கள் என்று அமர்க்களப்படுத்த தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால், சில ஏரியாக்களில் உள்ள அஜீத் ரசிகர்கள், வெடிகுண்டு மிரட்டல் விட்டவர்களுக்கு கண்டனக்குரல் எழுப்பி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, புதுவை உள்ளிட்ட சில ஏரியாக்களில் உள்ள ரசிகர்கள் திரளாக கூடி கண்டன பேனர்களை ஏந்தியபடி, வெடிகுண்டு மிரட்டல் விட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Comments

comments