as1980 முதல் 1990 வரையிலான காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். ரஜினி, கமல், ஸ்ரீதேவி, ராதிகா, ஸ்ரீப்ரியா, ரேவதி, நதியா என நட்சத்திரங்கள் ஆட்சிபுரிந்த கனவு காலம் அது. அந்த பத்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவர்கள் இன்னும் சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகை சுஹாசினி, மற்றும் லிசி, பூர்ணிமா, ராதிகா ஆகியோர் இணைந்து ஆண்டு தோறும் ஒரு இடத்தில் சந்தித்து விருந்து உண்டு, மலரும் நினைவுகளில் மூழ்கி இருப்பார்கள். கடந்த ஆண்டு மோகன்லாலின் பண்ணை வீட்டில் அனைவரும் கூடி விருந்து உண்டு மகிழ்ந்தார்கள்.

இந்த ஆண்டு சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் இணைந்து இந்த சந்திப்பு மற்றும் விருந்து நிகழ்ச்சியை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்தினார்கள். இதில் நடிகைகள் ஸ்ரீப்ரியா, லதா, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், நிரோஷா, நளினி, ரூபினி, லிஸி, ரேவதி, பூர்ணிமா, ரேகா, ரோஜா, மீனா, நதியா, அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர். நடிகர்களில் முக்கிய நடிகர்கள் யாரும் வரவில்லை. ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜயகுமார், மோகன், சரத்பாபு, சரண்ராஜ், ராம்கி, பிரதாப், பிரபு நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய இளம் நடிகர்களில் சிம்பு, விஜய்சேதுபதி, தனுஷ், வைபவ், நடிகைகளில் நீதுசந்திரா, வேதிகா, பிந்து மாதவி, இவர்களுடன் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

அதேபோல 80களில் கொடிகட்டி பறந்த இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு. ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், உள்பட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக ஷோபனாவின் நடன நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் அனைவரும் விடிய விடிய ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டாடினார்கள்.

 

Comments

comments