dasவிக்ரம், சமந்தா நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படம் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. ஆனால் ஐ படத்துக்காக “ஐ-யம் வெயிட்டிங்” என்கிறார் விக்ரம். விஜய்மில்டன் இயக்கி உள்ளார். கோலிசோடா என்ற யதார்த்த கதையை சிறுவர்களை வைத்து இயக்கிய விஜய்மில்டன் இயக்கி இருக்கும் ரோட் ஆக்ஷன் மூவி இது. கசிந்த வரை கதை இது.

விக்ரம் ஒரு லாரி டிரைவர், அதுவும் ஹைவேஸ் ஸ்பெஷலிஸ்ட். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் டிரக்கர் லாரியை ஓட்டுகிறவர். லாரி கிளீனராக முண்டாசுப்பட்டி மனீஷ் காந்த் நடிக்கிறார். ஒரு நாள் சரக்கு ஏற்றிக்கொண்டு வடநாட்டுக்குச் செல்கிறார்கள். பாட்டும் கூத்துமாக செல்லும் அவர்களின் லாரி பயணத்தின் நடுவே வந்து சேர்கிறார் சமந்தா. பெரிய இடத்து பொண்ணு. பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கும் பொண்ணு. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அசுர வேகத்தில் லாரியை ஓட்டி குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும்.

இடையில் செக்போஸ்ட். லாரி ரிப்பேர், கொள்ளைக்காரர்கள் தாக்குதல். டீசல் திண்டாட்டம், திடீர் ஸ்டிரைக் இத்தனை விஷயங்களையும் விக்ரம் எப்படி கடந்து சமந்தாவை பிரச்சினையிலிருந்து காப்பாற்றுகிறார் என்பது கதை.

இடையில் விக்ரமின் நல்ல எண்ணம், டைமிங் சென்ஸ், சண்டை, வீரம் இவற்றை பார்த்து சமந்தா காதல் கொள்கிறார். கடைசி 15வது நிமிடத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்துடன் முடியும் படம். படம் தொடங்கிய 30வது நிமிடத்திலிருந்த கிளைமாக்ஸ் எபெக்ட் வந்து விடுமாம். கடைசி வரை சேசிங் தானாம். படப்பிடிப்பு காலங்களில் விக்ரம் பல ஆயிரம் மைல்கள் லாரி ஓட்டியிருக்கிறார். ஐ படம் வெளிவந்து ஒருவாரம் வரைக்கும் படத்தின் ஸ்டில்களைகூட வெளியிட மாட்டார்கள் என்று தெரிகிறது.

120 கிலோ மீட்டர் வேகத்தில் லாரி ஓட்டும்போது முன்னால் செல்லும் வாகனத்தை பத்து எண்றதுக்குள்ள (10 விநாடிக்குள்) கணித்து செயல்படுவதுதான் சிறந்த டிரைவருக்கு அடையாளமாம். விக்ரம் அதில் கில்லாடியாம். அதுதான் இந்த தலைப்பாம்.

 

Comments

comments