saஇசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசைப் பயணம் மின்னலேவில் தொடங்கி தற்போது நண்பேன்டா வரை வந்திருக்கிறது. நேற்று (ஜன 8) அவருக்கு 40 வது பிறந்த நாள். நண்பர்கள், குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். 2015ம் ஆண்டை முக்கியமான ஆண்டாக கருதுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். காரணம் கடந்த ஆண்டு அவர் இசை அமைப்பில் வெளிவந்த இது கதிர்வேலன் காதல், யான் இரண்டு படங்களுமே வெற்றி பெறவும் இல்லை. பாடல்களும் பெரிதாக பேசப்படவுமில்லை.

2015ம் ஆண்டில் என்னை அறிந்தால், அனேகன், நண்பேன்டா படங்கள் ரிலீசாக வேண்டியது இருக்கிறது. என்னை அறிந்தால் பாடல்கள் ஹிட்டாகி விட்டது. அனேகன் பட பாடல்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை, ஒருவேளை பட ரிலீசுக்கு பிறகு ரீச்சாகலாம். நண்பேன்டா பாடல்கள் வெளிவரவில்லை. அடுத்து ஒன்றிரண்டு படங்களுக்கு இசை அமைக்கலாம்.

தொடர்ந்து பாடல்களை காப்பி அடிக்கிறார், ஒரே மாதிரி இசை அமைக்கிறார் என்ற விமர்சனங்களை தாண்டி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே இந்த ஆண்டு ஹாரிசுக்கு முக்கியமான ஆண்டாக இருக்கும்.

 

Comments

comments