dd1976-ல் அன்னக்கிளி திரைப்படத்தில் தொடங்கியது இளையராஜாவின் இசைப்பயணம்.

ஏகப்பட்ட படங்கள், எக்கச்சக்க சூப்பர்ஹிட் பாடல்கள் என 90-கள் வரை இசை சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்தார் இளையராஜா.

1992-ல் ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார்.

முதல் படத்தில் மட்டுமல்ல அடுத்தடுத்த படங்களிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற இமாலாய வெற்றியினால், இளையராஜாவின் திரையுலக வாழ்க்கை இருளடையத்தொடங்கி… ஒருகட்டத்தில் அஸ்தமனமாகிப்போனது.

தன் தோல்விக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றி மட்டுமல்ல, தன் தலைக்கனமும் காரணம் என்பதை சுய மதிப்பீடு செய்ய மறந்தார் இளையராஜா.

அதுமட்டுமல்ல, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த மணிரத்னம், பாரதிராஜா, கே.பாலசந்தர் போன்ற இயக்குநர்களை எல்லாம் எள்ளி நகையாடினார்.

முக்கியமாக, ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றிக்கூட்டணியாளரான ஷங்கர் மீது இளையராஜாவுக்கு இருந்த கடுப்பும் எரிச்சலும் சொல்லில் அடங்காது.

ஏ.ஆர்.ரஹ்மான் – ஷங்கர் கூட்டணியில் வெளியான பாடல்கள் ஒவ்வொருமுறை சூப்பர்ஹிட்டாகும்போது சூடாகிப்போவாராம் இளையராஜா.

இப்படியாக இம்மியளவும் நியாயமான காரணமில்லாமலே இளையராஜாவுக்கு எதிரியாகிப்போனார் ஷங்கர்.

அவரை கருவறுக்கக் காத்திருந்த இளையராஜாவுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தன் உதவியாளர் இயக்கிய கப்பல் படத்தை வாங்கி அண்மையில் வெளியிட்டார் ஷங்கர்.

கப்பல் திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் கரகாட்டகாரன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தது.

இளையராஜாவின் அனைத்து பாடல்களுக்கும் காப்புரிமை பெற்றுள்ள மலேஷியாவைச் சேர்ந்த அகி மியூஸிக் நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி வாங்கித்தான் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை கப்பல் படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற கப்பல் படத்தின் சக்சஸ்மீட்டில் கூட இதை உறுதிப்படுத்தினார் அப்படத்தின் இயக்குநர்.

இந்நிலையில், ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை ரீமிக்ஸ் செய்ய தன்னிடம் இருந்து முறையாக காப்புரிமை பெறவில்லை என்று இளையராஜா சார்பில் ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

இளையராஜா சார்பில், வழக்கறிஞர் எஸ்.கே.ரகுநாதன் வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளாராம்.

“கப்பல் திரைப்பட தயாரிப்பாளர் ஷங்கர், ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை பயன்படுத்து அகி மியூசிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிகிறது. எனது கட்சிக்காரருக்கும் அகி மியூசிக் நிறுவனத்துக்கும் எந்த உடன்பாடும் இல்லை. எனவே, அகி மியூசிக்கிடம் அனுமதி பெற்றது செல்லாது. பாடலை பயன்படுத்தியதற்கான ராயல்டியை இளையராஜாவுக்கு வழங்காவிட்டால் மேற்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்” என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸுக்கு ஷங்கரின் ரியாக்ஷன் என்ன?

”கப்பல் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் இல்லை. அவர் விநியோகஸ்தர்தான். இளையராஜாவின் குற்றச்சாட்டு எந்த விதத்திலும் ஷங்கரை கட்டுப்படுத்தாது. இது ஷங்கர் மீது உள்ள இளையராஜாவின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான். இந்த வழக்கை ஷங்கர் சட்டப்படி சந்திப்பார்” என்கிறார்கள் ஷங்கரின் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

Comments

comments