as‘புரட்சி இயக்குனர்’ என்று அழைக்கப்படும் எஸ்.ஏ.சந்திரசேகரின் சமீபகால படங்கள் எல்லாமே அந்த வகையறா இல்லை.

எப்படி இளையராஜா என்றால் 80, 90-களில் வெளியான பாடல்களை மட்டுமே எல்லோருக்கும் நினைவுபடுத்துகிறார்களோ அதே போல எஸ்.ஏ.சி என்றால் உடனே ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்று தான் ஆரம்பிப்பார்கள். மாறாக சுக்ரன். நெஞ்சிருக்கும் வரை என லேட்டஸ்ட் படங்களையெல்லாம் சொல்ல மாட்டார்கள்.

2 வருடங்களுக்கு முன்பு ‘வெளுத்துக்கட்டு’ என்ற படத்தை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் முதல்முறையாக 60 வயது ரொமான்ஸ் ஹீரோவாகவும் வெளுத்துக்கட்டியிருக்கும் படம் தான் ‘டூரிங் டாக்கீஸ்’. இப்படத்தை எஸ்.ஏ.சி தயாரித்து இயக்குவதோடு மட்டுமில்லாமல் அவரே மெயின் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லர் பங்ஷன் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் கலைப்புலி எஸ்.தாணு உட்பட நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த எஸ்.ஏ.சியிடம் இத்தனை வயசுல இப்படி ஒரு வேஷம் தேவைதானா? என்று கேட்டார்கள் விழாவுக்கு வந்திருந்தவர்கள்…

அதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சி “ நான் ஒன்னும் 20 வயசுப் பையனா இந்தப்படத்துல நடிக்கல, 60 வயசான ஒரு மனுஷனுக்கு அந்த வயசுல என்னென்ன குறும்புகள் செய்வானோ அந்தமாதிரியான வயசான கேரக்டரில் தான் நடிச்சிருக்கேன். என்றவர் முன்னதாக இந்தப்படத்துக்குப் பிறகு நான் படமே இயக்கப் போவதில்லை என்று அறிவித்ததை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வருத்தத்தோடு மேடையில் தெரிவித்து ”நீங்கள் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும். நீங்கள் முன்னால் ஓடுங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம்” என்றார் பெருந்தன்மையாக.

அதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சி 90களில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.

”நான் 90களில் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ப்ளாட்பாரத்துல தூங்கி எந்திரிச்சு வாய்ப்பு தேடுவேன். அப்புறம் டைரக்டராகி நெறைய ஹிட் படங்கள் கொடுத்து நல்லா சம்பாதிச்ச பின்னாடி இது போதும், இதுக்கப்புறம் நான் டைரக்‌ஷனே பண்ண வேண்டாம், படம் தயாரிக்கவும் வேண்டாம்னு முடிவு பண்ணினேன். அப்போ தான் என்னோட பையன் விஜய் நடிகராக ஆசைப்பட்டார்.

நான் அப்போ பீல்டுல ரொம்ப ஃபேமஸா இருக்கிற பெரிய பெரிய டைரக்டர்கள் எல்லார்க்கிட்டேயும் என் பையனைக் கூட்டிட்டுப் போய் காட்டி சார் என் பையனை ஒரு ஹீரோவா வெச்சு படம் டைரக்ட் பண்ணுங்க, எவ்ளோ செலவானாலும் நான் பார்த்துக்கிறேன்”னு சொன்னேன். ஆனா யாருமே விஜய்யை வெச்சு படம் பண்றதுக்கு தயாரா இல்லை.

அதுக்கப்புறம் தான் நானே மறுபடியும் டைரக்டராகி விஜய்யை வெச்சு சொந்தமா படங்களை தயாரிக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு விஜய் பெரிய ஹீரோவாயிட்டாப்ல, நல்ல மருமகள், நல்ல பேரக்குழந்தைகள், நெறைய பணம், எல்லா வசதிகளும் இருக்கு. போதும் இதுக்கு மேல நாம எதுக்கு டைரக்ட் பண்ணனும்னு நானேதான் முடிவெடுத்தேன். டைரக்‌ஷன் மட்டும் தான் பண்ண மாட்டேன். மத்தபடி என்னோட பேனர்ல திறமையான இயக்குனர்களை வெச்சு படம் தயாரிப்பேன் என்றார் எஸ்.ஏ.சி.

விழாவில் விஜய்யின் மனைவியும், எஸ்.ஏ.சியின் மருமகளுமான சங்கீதாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Comments

comments