asநான், சலீம், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ள இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர், திருடன், சைத்தான் போன்ற கதைகளையும் ஏற்கனவே ரெடி பண்ணி வைத்திருக்கிறார். என்றபோதும், இன்னும் வித்தியாசமான கதைகள் கிடைத்தால் அடுத்தபடியாக நடிக்கலாம் என்றும் நினைக்கிறாராம். அதனால், புதுமையான கதைகள் வைத்திருப்பவர்கள் தன்னிடம் கதை சொல்ல வரலாம் என்று கோலிவுட் டைரக்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. ஆனால், இதற்கு முன்பு அவரைக்கொண்டு படம் இயக்கிய சில புதுமுக டைரக்டர்களை படப்பிடிப்புதளத்தில் அவர் ஓவர்டேக் செய்ததாக கோலிவுட்டில் பரவியிருக்கும் செய்தியால் புதியவர்கள் அவரிடம் கதை சொல்லவே பயந்து நிற்கிறார்கள்.

ஆனால் இதுபற்றி விஜய் ஆண்டனிதரப்பில் விசாரித்தால், தான் நடித்துள்ள படங்களில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்ததோடு, அவரே தயாரிக்கவும் செய்தார். அதனால் படங்களை கண்டிப்பாக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவரும் இறங்கி வேலை செய்தார். படம் நன்றாக வர வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் செய்ததை ஓவர்டேக் என்று சொல்வது தவறு. புதியவர்கள் படத்தை சொதப்பி விட்டால் அவருக்குத்தானே நஷ்டம். பணம் போட்டு படமெடுப்பவர்களுக்குத்தான் அதிலுள்ள டென்சன், படபடப்பு எல்லாம் புரியும் என்கிறார்கள்.

Comments

comments