asலிங்குசாமியைப் பார்த்து ஏ.ஆர்.முருகதாசும் ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். விக்ரம் நடிக்கும் 10 எண்றதுக்குள்ளே படத்தை தற்போது தயாரித்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்து எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் ஆதாமின் ஆப்பிள் என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படம் இன்னும் டேக் ஆப் ஆகவில்லை. அதற்குள் இன்னொரு படத்தை தொடங்கிவிட்டார்.

கௌதம் கார்த்திக் நடிக்கும் ரங்கூன் படம்தான் அது. இப்படத்தை ராஜ்குமார் இயக்குகிறார். மணிரத்னத்தின் கடல் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் இரண்டாவது படமாக என்னமோ ஏதோ வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் நடித்திருக்கும் படம் – வை ராஜா வை. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

கேமராமேன் சரவணன் இயக்கத்தில் லக்ஷ்மிமேனனுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் சிப்பாய் படமும் விரைவில் வெளியாக உள்ளது. இப்படங்கள் தவிர இந்திரஜித் என்ற படத்தில் நடித்து வரும் கௌதம் கார்த்திக், இந்தப்படங்களை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு தற்போது ரங்கூன் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்கில் டிக்குலு சூடக்கு ராமய்யா என்ற படத்தில் நடித்திருக்கும் சனா மக்பூல் எனும் புதுமுகத்தை ரங்கூன் படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க தேர்வு செய்திருக்கிறார்கள்.

 

Comments

comments