30-prithviraj-and-dulquar-salman2௦1௦ல் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தான் ‘சிகார்’.. பத்மகுமார் இயக்கிய இந்தப்படத்தில் மோகன்லால் போலீஸ் ஆபிசராகவும் பின்னர் லாரி டிரைவராகவும் நடித்திருந்தார். இதில் இன்னும் ஸ்பெஷல் என்னவென்றால் மோகன்லாலின் மகளாக அனன்யாவும் நண்பராக தலைவாசல் விஜய்யும் நடித்திருந்தனர்.. ஆந்திர தேசத்து நக்சலைட்டாக மிக முக்கியமான வேடத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்திருந்தார்.. படத்தின் கதையை சுரேஷ்பாபு எழுதியிருந்தார். பிளாஸ்பேக்கை கட் பண்ணிவிட்டு அப்படியே இப்போதைய விஷயத்திற்கு வருவோம்.. இப்போது மோகன்லால், பத்மகுமார், சுரேஷ்பாபு என ‘சிகார்’ டீம் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. படத்திற்கு ‘கனல்’ என பெயர் வைத்துள்ளார்கள். இதில ஹைலைட்தான விஷயம் என்னவென்றால் இன்னும் உள்ள இரண்டு முக்கிய கேரக்டர்களில் பிருத்விராஜூம், துல்கர் சல்மானும் நடிக்க இருக்கிறார்களாம். இவர்கள் இருவரையும் சம்மதிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.

 

Comments

comments