asஇங்கே சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘ரஜினி முருகன்’ என பெயர் வைத்தது எல்லாம் இப்போதான்.. ஆனால் அதற்கு முன்னரே மலையாளத்தில் சூப்பர்ஸ்டாரான மோகன்லால் நடிக்கும் படத்திற்கே ‘புலி முருகன்’ என பெயர் வைத்து ஆச்சர்யப்படுத்தினார் இயக்குனர் வைசாக்.. ஆனால் வெறுமனே பெயர் வைக்கப்பட்டதோடு சரி.. மேற்கொண்டு இந்த படம் வளர்வதற்கான அறிகுறியும் தெரியவில்லை.. ஒரு சிலர் இந்த புராஜெக்ட் கைவிடப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘கஸின்ஸ்’ படம் பிளாப் ஆனதும் அதற்கு முன் வெளியான விஷூதன்’ சரியாக போகாததும் தான் இதற்கு காரணம் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் வைசாக்கோ, இதை மறுத்து ‘புலி முருகன்’ படம் கைவிடப்படவில்லை என்றும் இந்தப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் வேலை பிரபல கதாசிரியர்களான உதயகிருஷ்ணா-சிபி கே.தாமஸ் ஆகியோரின் மேற்பார்வையில் உருவாகி வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது மோகன்லால் ஜோஷியின் ‘லைலா ஓ லைலா’ படத்தை முடித்துவிட்டு, சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ‘புலி முருகன்’ டேக் ஆப் ஆகலாம் என தெரிகிறது.

Comments

comments