saசிம்பு நடித்த படங்கள் எப்போது வெளியாகும் என்று அவருக்கு மட்டுமல்ல, கடவுளுக்கே தெரியாது என்று கிண்டலடிக்கும் நிலையில்தான் உள்ளது.

அவர் நடித்த படங்கள் வெளியாகி வெகு காலம் ஆகிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த வேட்டை மன்னன் என்ற படம் சில மாதங்களுக்கு முன் ட்ராப் செய்யப்பட்டது. சிம்பு நடித்து வந்த மற்றொரு படமான ‘வாலு’ படமும் மாதக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் சிம்புவுடன் ஹன்சிகா மோத்வானி, சந்தானம், வி.டி.வி.கணேஷ் முதலானோர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தையும் ஒழுங்காக சிம்பு முடித்துக்கொடுக்கவில்லை. எனவே வாலு படத்தையும் ட்ராப் பண்ணிவிட தயாரிப்பாளர் தீர்மானித்துவிட்டார் என்றும், வாலு படத்தை இயக்கும் விஜய் சந்தர் என்ற புதுமுக இயக்குநர் மனம் வெறுத்துப்போய் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் வாலு படம் ட்ராப்பாகவில்லை, விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வாலு படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் திட்டத்துடன் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனராம்.

பொங்கல் முடிந்ததும் வாலு படத்தை சென்சாருக்கு அனுப்ப உள்ளனர் என்றும், சென்சார் முடிந்ததும் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறார்கள் என்றும் தகவல் அடிபடுகிறது.

 

Comments

comments