asசேர்த்துப்பார்த்தா சைலண்ட்டா இருக்கு… பிரிச்சுப்பார்த்தா வயலன்ட்டா இருக்குன்னு விவேக் சொல்வாரே, அதுதான் இப்போது பஹத் பாசிலின் சூழ்நிலை.. பஹத் திறமையான நடிகர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் தான் அவரை இக்கட்டான சூழலுக்கு தள்ளிவிடுகின்றன. கடந்த வருடங்களில் பஹத் பாசில் நடித்த படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது ‘பெங்களூரு டேய்ஸ்’ மட்டுமே.. அவரே தயாரித்து நடித்த அயூப்பிண்டே புஸ்தகம்’ ஓரளவு ஹிட்.. ஆனால் இவை இரண்டுமே மல்டி ஸ்டார்ஸ் நடித்த படங்கள்.. ‘பெங்களூரு டேய்ஸ்’ படத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோர் நடித்திருந்தாலும் பஹத்தின் பங்குதான் முக்கியமானது. அதேபோல கடந்த வருட இறுதியில் பஹத், லால், ஜெயசூர்யா நடிப்பில் வெளியான ‘அயூப்பிண்டே புஸ்தகம்’ படமும் ஓரளவு வசூல் பார்த்தது. மற்றபடி சோலோ ஹீரோவாக அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவர் நன்றாக நடித்திருந்தாலும் சுமார் என்கிற அளவிலேயே இருந்தன.

இந்த வருடம் அவரது முதல் போணியாக வெளியான ‘மரியம் முக்கு’ அவரது புதுவருட கணக்கை உற்சாகமாக துவங்கி வைக்கவில்லை என்பதே உண்மை.. அதனால் இனிமேல் கொஞ்சம் அதிகமாக, மல்டி ஸ்டார்ஸ் கதைகளில் கவனம் செலுத்தலாமா என யோசித்து வருகிறார் பஹத் பாசில். இருந்தாலும் தற்போது அவர் சோலோ ஹீரோவாக நடித்துவரும் ‘ஹாரம்’, ‘ஆயாள் ஞானல்ல’ ஆகிய இரண்டு படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புதான் அவரை ஒரு திடமான முடிவெடுக்க செய்யும் என நம்பலாம்.

Comments

comments