Melnattu_Marumagan_Movie_Stills045புதிய தொழில்நுட்ப கலைஞர்கள், புதுமுக நடிகர் நடிகைகள் இணைந்து மேல்நாட்டு மருமகள் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். ஸ்கை மூவீஸ் சார்பில் எஸ்.பகதூர்ஷா தயாரிக்கிறார். ராஜ்கமல், ஆண்ட்ரீயன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கவுதம் கிருஷ்ணா கேமரா மேனாகவும், கிஷோர் குமார் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்கள். எம்.எஸ்.எஸ். இயக்குகிறார்.

“வெளிநாட்டு மோகம் இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டில் வாழ்கிறவர்களுக்குத்தான் நம் நாட்டின் அருமை புரியும். பணத்துக்காக வெளிநாடு செல்பவர்கள் என்னதான் வசதியாக வாழ்ந்தாலும் நம் நாட்டு கலாச்சாரம், பண்பாடு, உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை. அப்படி வெளிநாடு சென்ற ஒருவன் எதையெல்லாம் இழக்கிறான். எதையெல்லாம் பெறுகிறான் என்கிற கதை. படத்தில் பணியாற்றும் அனைவரும் புதுமுங்கள்” என்றார் இயக்குனர் எம்.எஸ்.எஸ்.

 

Comments

comments