sஜிகர்தாண்டாவுக்கு பிறகு ஆடாம ஜெயிச்சோமடா, ஆ போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த பாபி சிம்ஹா, தற்போது ஹீரோவாகி விட்டார். அவரை ஜிகர்தண்டாவில் மதுரை வில்லனாக நடிக்க வைத்து தமிழ்நாடு முழுக்க பேச வைத்த கார்த்திக் சுப்புராஜே தனது இறைவி படத்தில் அவரை முதலில் ஹீரோவாக்கியிருக்கிறார். விளைவு, அதையடுத்து பாம்பு சட்டை, உருமீன், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது போன்ற படங்களில் ஹீரோவாகி விட்டார். இதில் பாம்பு சட்டைப் படத்தைப்பொறுத்தவரை, அவரது கேரக்டர் நெகட்டிவாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளதாம். ஆனால், கிளைமாக்சில் பாசிட்டிவாக மாறிவிடுமாம். அதனால், இந்த படத்தில் வில்லன்-ஹீரோ என இரண்டு விதமான நடிப்பையும் வெளிப்படுத்துகிறாராம் பாபி சிம்ஹா.

ஆனால், மற்ற படஙக்ளில் பாசிட்டிவான ரோலில்தான் படம் முழுக்க வருகிறாராம். அவரிடத்தில் விலலனாக உங்களை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் ஹீரோவாக எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டால், நேரம், ஜிகர்தண்டா படங்களில் நான் நடித்த வில்லன் வேடங்களே என்னை அடையாளம் காட்டியவை என்றபோதும், பாசிட்டிவ் வேடங்களிலும் ரசிகர்களை ஏற்க வைக்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான ஹீரோவாகத்தான் இந்த படங்களில் நடிக்கிறேன். மற்ற படங்களுக்கும் நான் நடிக்கும் படங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். மேலும், படத்துக்குப்படம் நல்லவனாகவே நடிக்க வேண்டும் என்றும் நான் ஆசைப்படவில்லை. கதைகளுக்கேற்ப நெகட்டிவ், பாசிட்டிவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும என்பதே எனது விருப்பமும் கூட என்கிறார் பாபி சிம்ஹா.

Comments

comments