saஜனவரி 3ம் தேதி சிம்பு பதிவிட்ட ஒரு டிவீட்…“இது நம்ம ஆளு’ டீசர் வருதுன்னு சொன்னதுக்கே இப்படி டிரெண்ட் பண்றீங்க…என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா,” என ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசர் பொங்கலுக்கு வருவதைப் பற்றிய செய்திக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பிற்காக சிம்பு பதிவிட்ட டிவீட் அது.

ஜனவரி 8ம் தேதி அப்படத்தின் இயக்குனர் பாண்டி ராஜ் போட்ட ஒரு டிவீட், “இது நம்ம ஆளு’ டீசர் பொங்கலுக்கு வருது, ஆனால் பின்ன இசை இன்னும் வரலை..என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… @சிலம்பரன், @குறளரசன்,” ஆகியோரின் டிவிட்டர் முகவரியையும் சேர்த்து அப்படத்தின் இயக்குனரான பாண்டிராஜ் ஒரு பதிவைப் போட்டுள்ளார்.

‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என ரசிகர்களிடம் சிம்பு சொன்னதை அவருக்கே திருப்பிப் போட்டு இயக்குனர் பாண்டிராஜ் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். ‘இது நம்ம ஆளு’ படம் 2013ம் ஆண்டே ஆரம்பமானது, பல தடைகளைக் கடந்து ஒரு வழியாக படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில பாடல்கள்தான் எடுக்கவேண்டும். ஆனால், அந்தப் பாடல்களை படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகும் சிம்புவின் தம்பியான குறளரசன் இன்னும் தரவில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே, படத்தின் டீசரை பொங்கலுக்கு வெளியிடலாம் என அறிவித்தும், அதற்கும் பின்னணி இசையமைத்துக் கொடுக்காமல் சிம்பு பிரதர்ஸ் தவிக்க வைத்து வருகிறார்கள். ‘இது நம்ம ஆளு’ன்னு படத்துக்குப் பேரு வச்சிட்டு படத்தோட இயக்குனர் கிட்டயே ‘வேற ஆளு’ மாதிரி ஃபீல் பண்றீங்களேம்மா…தனுஷின் டிரைலரையெல்லாம் சிம்பு ரி-டிவீட் செய்கிறார், ஆனால் அவருடைய டீசரை சீக்கிரம் வெளியிட்டு அவருடைய ரசிகர்களையும், இயக்குனரையும் திருப்திப்படுத்துவாரா…?

Comments

comments