asரேடியோ தொகுப்பாளராக இருந்த சிவா, சென்னை 28 படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் படம், தில்லுமுல்லு, கலகலப்பு அவருக்கு நல்ல புகழை பெற்றுக் கொடுத்தது. சில படங்கள் தோல்வி அடையவே நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். ஆடாம ஜெயிச்சோமடா படத்திற்கு வசனம் எழுதினார். இப்போதும் சில படங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்.

சிவா விரைவில் இயக்குனராகிறார். இதற்காக அமெரிக்கா சென்று மூன்று ஸ்கிரிப்டுகளை எழுதி முடித்து திரும்பியிருக்கிறார். அதில் “காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு” என்ற கதையை அவரே இயக்கி நடிக்கப்போகிறார். தற்போது அவர் 144 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது வழக்கமான காமெடி படம். படப்பிடிப்புகள் மதுரையில் நடக்கிறது. இந்தப் படம் முடிந்ததும் தனது படத்தை சிவா இயக்குவார் என்று தெரிகிறது.

 

Comments

comments