as‘சுப்ரமணியபுரம்’ அடித்த டார்ச்லைட் வெளிச்சத்தில் பளிச்சென அறிமுகமானவர் ஸ்வாதி. கடந்த 2012ல் ஒரு படம் கூட இவருக்கு ரிலீசாகாத நிலையில் அடுத்த வருடம் நான்கு படங்கள் வெளியாகி ஆச்சர்யப்படுத்தின. போன வருடம் கூட இவர் நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகின. தற்போது தமிழில் யட்சன், யாக்கை மற்றும் மலையாளத்திள் டபுள் பேரல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘ஆடு ஒரு பீகர ஜீவியானு’ படம் இந்த வாரம் வெளியாகிறது.

இப்படி தமிழிலும், மலையாளத்திலும் மாறி மாறி நடித்துக்கொண்டிருக்கும் ஸ்வாதி, தெலுங்கில் நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘சொக்கடே சின்னி நாயனா’ என்கிற படத்தில் மகனாக நடிக்கும் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கும்படி வாய்ப்பு தேடிவர ‘நோ’ சொல்லிவிட்டாராம்.. காரணம் அவர்கள் கேட்ட தேதிகளை தமிழிலும், மலையாளத்திலும் நடிக்க ஏற்கனவே ஒதுக்கி கொடுத்துவிட்டாராம். ஆனால் நாகார்ஜூனாவின் ரசிகர்களை இவரது மறுப்பு கொந்தளிக்க வைக்க, சமூக வலைதளங்களில் இவர் மீது அனலை கக்கி வருகின்றனராம். நாகார்ஜூனாவுடன் நடிக்கமுடியாத தன் சூழ்நிலையை பொறுமையாக விளக்கி வருகிறாராம் ஸ்வாதி.

 

Comments

comments