asமன்மதராசா புகழ் நடன மாஸ்டர் சிவசங்கர் எந்த படத்தில் பணியாற்றினாலும், அந்த இடமே அமர்க்களப்படும். குறிப்பாக, அவர் நடனம் அமைக்கும் படங்களில் நடிக்க செல்லும் நடிகைகள் பயந்து கொண்டேதான் செல்வார்கள். காரணம், அவர்கள் நடனத்தில் ஏதாவது தவறு செய்தால், உடனே அவருக்கு கோபம் தலைக்கு ஏறிவிடும். அதனால் கையில் மைக்கை வைத்துக்கொண்டே அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டித்தீர்ப்பார். குறிப்பாக வளர்ந்து வரும் நடிகர்- நடிகைகள் என்றால் ஒரு வழியாகி விடுவார்கள். இன்றைக்கு முன்னணியில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் அவரிடம் திட்டு வாங்கி வளர்ந்தவர்கள்தான். ஆனபோதும், சமீபகாலமாக சிவசங்கர் மாஸ்டர் யாரையும் முன்பு மாதிரி திடடுவதில்லையாம்.

காரணம், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்பட சில படங்களில் நடித்துள்ள அவர், இதுவரை நடிகர் நடிகைகளை விட்டு விலகி நின்றார். ஆனால் இப்போது அனைவரிடமும் தோழமையுடன் பழகுகிறாராம். அதோடு, அப்படி அனைவர் முன்னிலையிலும் அவர்களை திட்டுவதால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய மனக்கஷ்டம் ஏற்படும் என்பதையும் புரிந்து கொண்டு விட்டாராம். இதை சில படங்களில் நடித்து வரும்போது கூறும் அவர், இனிமேல் நடன மாஸ்டராக பணியாற்றும்போது முடிந்தவரை யாரையும் திட்டாமல் கோபப்படாமல் வேலை வாங்கப்போகிறேன் என்கிறாராம் சிவசங்கர் மாஸ்டர். விளைவு, இதுவரை அவர் நடன மாஸ்டர் என்றால் நடுங்கிக்கொண்டே ஸ்பாட்டுக்கு செனறவர்கள் இப்போது பயமின்றி உற்சாக மனநிலையுடன் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

Comments

comments