eros-imgஇந்தியில் மிக பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் திரைப்பட நிறுவனம் தான் ஈராஸ் இன்டர்நேஷனல். தமிழில் ரஜினி நடித்து சௌந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம் தான். தற்போது இந்த நிறுவனம் மலையாளத்திலும் முதன்முதலாக தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.

‘த்ரிஷ்யம்’ என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தற்போது அதன் ரீமேக்காக கமலை வைத்து இயக்கிவரும் ‘பாபநாசம்’ படத்தை முடித்துவிட்டு மீண்டும் மலையாளத்தில் ‘லைஃப் ஆப் ஜோஸுட்டி’ என்ற படத்தை இயக்குகிறார்.. இந்தப்படத்தை தயாரிப்பதன் மூலம் மலையாளத்திளும் அழுத்தமாக தனது காலை ஊன்ற அச்சாரம் போட்டுள்ளது ஈராஸ் நிறுவனம்.

 

Comments

comments