saதெலுங்கு டைரக்டர் கோதண்டராம ரெட்டியின் மகன்தான் நடிகர் வைபவ். வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா மற்றும் ஈசன், அனாமிகா போன்ற படங்களில் நடித்த இவர், டமால் டுமீல் படத்தில் ஹீரோவானார். அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து நடித்த கப்பல் படம் சத்தமில்லாமல் வளர்ந்து வந்தபோதும், அந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வாங்கி வெளியிட்டதால் வெற்றிப்படமாகியிருக்கிறது.

இந்த நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் விஷாலின் ஆம்பள படத்தில் விஷாலின் தம்பியாக இரண்டாவது ஹீரோ போன்று நடித்துள்ளார். அதோடு, தெலுங்கில் விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோருக்கு இருக்கிற மார்க்கெட்டை கருத்தில் கொண்டு ஆந்திராவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடப்படுகிறதாம்.

இதனால் அதிக உற்சாகத்தில் இருக்கிறார் வைபவ், காரணம், தனது தாய்மொழியான தெலுங்கில் அழுத்தமாக காலூன்ற வேண்டும் என்பதுதான் இவரது நோக்கமாம். அதனால் காஸ்கோ, ஆக்சன் 3டி ஆகிய படங்களில் நடித்திருக்கும் வைபவ், தற்போது உதயம் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஆம்பள படம் தெலுங்கில் ஹிட் அடித்தால், தமிழைப்போலவே தெலுங்கிலும் ஒரு இடம் பிடித்து விடலாம் என்று எதிர்பார்க்கிறார் வைபவ்.

 

Comments

comments